
பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு பயிற்சி முகாம்
தமிழர் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்து நெறியுரை ஆற்றினார்
சென்னையில் பகுத்தறி வாளர் கழகப் பொறுப் பாளர்கள் மற்றும் தோழர் களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் 16.9.2010 (வியா ழக்கிழமை) அன்று நடை பெற்றது. சென்னை பெரி யார் திடல் - அன்னை மணியம்மையார் மன்றத் தில் நடைபெற்ற புத் தாக்க பயிற்சி முகா மினை பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து செயல்பாட்டு நெறியுரை ஆற்றினார்.
பகுத்தறிவாளர் கழகம், சீரிய நோக்கங் களைக் கொண்டு, சில செயல்பாட்டுத் தளங் களில் பணியாற்ற வேண் டும் எனக் கருதி தந்தை பெரியாரால் 1970ஆம் ஆண்டில் தோற்றுவிக் கப்பட்ட அமைப்பாகும். அரசு மற்றும் இதர அலு வல் பணிபுரிவோரும் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு பொதுப் பணி ஆற்றிட வழி வகுக் கும் விதமாக பகுத்தறி வாளர் கழகம் தொடங் கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
திராவிடர் கழகத் தோழர்கள் செயல் படும் தளங்களிலிருந்து இன்னும் பரந்துபட்ட வாய்ப்புப் பெற்றது பகுத் தறிவாளர் கழகம். தமிழ் நாடு மட்டுமின்றி, நாட் டின் பிற மாநிலங்களில், உலகின் பிற நாடுகளி லும் தந்தை பெரியாரின் மனிதநேயக் கருத்து களை பரப்பிட வழிகோ லும் வல்லமை பெற்றது பகுத்தறிவாளர் கழகம்.
பகுத்தறிவாளர் கழ கப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் திட் டமிட்டுச் செயல்பட வேண்டும். தங்களது அலு வலகப் பணியோடு, பகுத் தறிவுப் பிரச்சாரப் பணி யும் மேற்கொள்ளுவதால், கால விரயமின்றி கடமை ஆற்றவேண்டிய பொறுப்பு பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு உள்ளது. மாறிவரும் சமூக, பொருளாதாரச் சூழலுக்கு ஏற் றவாறு செயல்பாட்டு அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஊடகப் பார்வை, கணினி தொழில் நுட்ப பயன்பாடு, கிடைக் கின்ற வசதி வாய்ப்பு களுக்கு ஏற்றவாறு திட்ட மிட்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி இலக்கினை எளிதாக சென்றடையலாம்.
நாம் பகுத்தறிவாளர் செயல்பாட்டிற்கு என்ன பங்களிப்பினை, எவ்வாறு கடந்த காலங்களில் அளித்து உள்ளோம், இனி வருங்காலத்தில் அளிக்க உள்ளோம் என நினைத்துப் பார்த்து செயல்பட தோழர்கள் முன் வர வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.
தமிழர் தலைவரின் நெறியுரையினை தொடர்ந்து, பகுத்தறிவுக் கொள்கை செயல் பாட்டுத் தளங்கள் எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலா ளர் கவிஞர் கலி.பூங்குன் றன் உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத் தின் தனித்துவ செயல் பாட்டிற்கான கருத்து களை எடுத்துரைத்தார். பெரியார் பேருரையா ளர் கு.வெ.கி.ஆசான் பகுத் தறிவுப் பிரச்சாரப் பணி அணுகுமுறைகள் எனும் தலைப்பில் களப் பணி ஆற்றுவதற்கான செயல் முறை குறிப்பு களை அளித்தார்.
நண்பகல் உணவிற் குப் பின் பெரியார் சுய மரியாதை ஊடகத் துறை சார்பாக வர்ணம் மற் றும் நடந்த கதை ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. குறும்பட கருத்துகளும், பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியில் குறும்படத் திரை யிடலால் கிடைக்கும் அனுகூலங்கள் பற்றி தோழர்களுக்கு எடுத்து ரைக்கப்பட்டது. பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலை வர் வா.நேரு தோழர் களுக்கு பயன்படும் வகை யில் கருத்துரையாற்றினார்.
நிறைவாக பொறுப் பாளர்கள் மற்றும் தோழர் களுடன் கலந்துரையாடி, பகுத்தறிவாளர் கழகத் தின் செயலூக்கத்திற் கான நடைமுறைக் குறிப் புகள் வழங்கி திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் நிறைவுரை ஆற்றினார்.
பயிற்சி முகாமின் முக வுரை மற்றும் வரவேற் புரையினை பகுத்தறிவா ளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரே சன் ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் வடசேரி இளங்கோவன் நன்றியுரை வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதி லிருந்தும் 500-க்கும் மேற் பட்ட பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் கள் மற்றும் தோழர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு கலந்துரையா டினர்.