பகுத்தறிவாளர் கழகத்தின் கம்பீரமான பணிகள்!
அரசு ஊழியர்கள் என்றால் அவர்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடலாம்; மதச் சார்பற்ற அரசின் பணியாளர்களாகயிருந் தாலும் வெளிப்படையாக மத நடவடிக் கைகளில் ஈடுபடுவதில் தடையிருப்பதில்லை.
மதச் சார்பற்ற அரசில் நிகழ்ச்சிகள் எல்லாம்கூட இந்து மத அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பூமி பூஜை என்ற பெயரால் இந்து மதச் சடங்குகள், இன்னோரன்ன மதவழிச் செயல்பாடுகள் தங்குத் தடையின்றி நடைபெற எவ்விதத் தடையும் இல்லை என்பது தான் நிலைமை இந்த நிலையில் அரசு - ஊழியர்கள், அலு வலர்கள், அதிகாரிகள் ஏன் பகுத்தறிவின் அடிப்படையில் செயல்படக் கூடாது?
மனிதன் என்றாலே பகுத்தறிவு வாதிதானே? இந்தச் சிந்தனையின் அடிப் படையில் தோற்றுவிக்கப்பட்டதுதான் பகுத்தறிவாளர் கழகம்.
1970 செப்டம்பர் 6-ஆம் தேதியன்று சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலை வாணர் அரங்கம்) தந்தை பெரியார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டதுதான் பகுத்தறி வாளர் கழகம் தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலாளர் திரு. கா.து. நடராசன் தொடக்க விழாவுக்குத் தலைமை தாங்கினர்.
மாண்புமிகு அமைச்சர் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார்.
தந்தை பெரியாரின் நன்கொடை
பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கி வைத்து அறிவுரை ஆற்றிய தந்தை பெரியார் அவர்கள் கழகத்தின் வளர்ச்சிக்காக கழகத்தின் தலைவர் திரு. சி.டி. நடராசன் அவர்களிடம் 1000 ரூபாயை நன்கொடையாக அளித்தார்கள். தொடர்ந்து அய்யா அவர்கள் பேசுகையில் கழகம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பல வகையில் வலிவுடன் செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் கூறினார்கள். கழகம் தனக்கென ஆங்கில ஏடு ஒன்று விரைவில் தொடங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்கள். மேலும் துண்டுப் பிரசுரங்கள், மலிவுப் பதிப்புகள் வெளியிடுதல். கருத்தரங்குகள், விளக்கக் கூட்டங்கள் இவற்றுக்கு ஏற்பாடு செய்தல், பிரசார நாடகங்கள் பலவற்றை நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் விரைந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். மேலும் பகுத்தறிவாளர்கள் தம் சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சின்னம் ஒன்றினை உடனே உருவாக்குங்கள் என்றார்கள். கூட்டத்தில் தோழர்கள் துண்டேந்தியமைக்கு ஆதரவாக ரூபாய் 129-30 காசு வசூலாகியது.
தமிழ் நாடெங்கும் பகுத்தறிவாளர் கிளைகள் தொடங்கப்பட்டன தொடக்க முதலே இந்த அமைப்பின் புரவலராக மானமிகு கி. வீரமணி அவர்கள் இருந்து வழி நடத்தி வருகிறார்.
பல மாநில மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தந்தை பெரியார் அவர்கள் இருந்தபோது சென்னையில் வெகு சிறப்புடன் நடத்தப்பட்டது. (1972 மே 27), பகுத்தறிவுக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, பாட்டரங்கம் படத்திறப்புகள் என்று பல வகையிலும் அறிவார்ந்த முறையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
கவுதமப் புத்தர் படத்தினை புரவலர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். இங்கர்சால், பெர்னாட்சா, கலிலியோ, ரசல் நேரு, டாக்டர் அம்பேத்கர் எம்.என். ராய், பிராட்லா, மா. சிங்காரவேலர் முதலிய உலகப் பகுத்தறிவாளர்கள் விஞ்ஞானிகள் படங்களையெல்லாம் அறிஞர் பெரு மக்கள் திறந்து வைத்து அரிய உரைகளை நிகழ்த்தினர்.கூறினார்கள். கழகம் தனக்கென ஆங்கில ஏடு ஒன்று விரைவில் தொடங்க வேண்டிய அவசி யத்தை வலியுறுத்தினார்கள். மேலும் துண்டுப் பிரசுரங்கள், மலிவுப் பதிப்புகள் வெளியிடுதல். கருத்தரங்குகள், விளக்கக் கூட்டங்கள் இவற்றுக்கு ஏற்பாடு செய்தல், பிரச்சார நாடகங்கள் பலவற்றை நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் விரைந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். மேலும் பகுத்தறி வாளர்கள் தம் சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சின்னம் ஒன்றினை உடனே உருவாக்குங்கள் என்றார்கள். கூட்டத்தில் தோழர்கள் துண் டேந்தியமைக்கு ஆதரவாக ரூபாய் 129-30 காசு வசூலாகியது.
தமிழ் நாடெங்கும் பகுத்தறி வாளர் கிளைகள் தொடங்கப் பட்டன. தொடக்கம் முதலே இந்த அமைப்பின் புரவலராக மானமிகு கி. வீரமணி அவர்கள் இருந்து வழி நடத்தி வருகிறார்.
பல மாநில மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தந்தை பெரியார் அவர்கள் இருந்தபோது சென்னையில் வெகு சிறப்புடன் நடத்தப் பட்டது. (1972 மே 27), பகுத் தறிவுக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, பாட்டரங்கம் படத் திறப்புகள் என்று பல வகையிலும் அறிவார்ந்த முறையில் நிகழ்ச் சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
கவுதமப் புத்தர் படத்தினை புரவலர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். இங்கர்சால், பெர்னாட்சா, கலிலியோ, ரசல் நேரு, டாக்டர் அம்பேத்கர் எம்.என். ராய், பிராட்லா, மா. சிங்காரவேலர் முதலிய உலகப் பகுத்தறிவாளர்கள் விஞ்ஞானி கள் படங்களையெல்லாம் அறி ஞர் பெரு மக்கள் திறந்து வைத்து அரிய உரைகளை நிகழ்த்தினர்.
அமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் மாநாட்டுக்கு தலைமை வகிக்க, முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.
தந்தை பெரியார் அவர்களே கலந்து கொண்டது தனிப் பெரும் சிறப்பாகும். 17 அரிய தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல 1980 டிசம்பர் 31-லும் 1981 சனவரி முதல் நாளிலும் சென்னைப் பெரியார் திடலில் இரு நாள்கள் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு தனிச் சிறப்பு மிக்கவை.
புரவலர் கி. வீரமணி அவர் களின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டினை முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார். மிஸ்கேட் தாம்சன் நெயில் கெய்டன் (இங்கிலாந்து) ஆகிய பரு மக்கள் எல்லாம் விழாவில் பங்கு கொண்டனர்.
அம்மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட 22 தீர்மானங்களும் காலத்தை வென்று நிற்கக் கூடிய கருவூலங்களாகும்.
குறிப்பாக கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக் கீடு செய்ய வழி வகுக்கும் சட்டப் பிரிவுகளை அரசமைப்புச் சட் டம் ஒன்பதாவது அட்டவணையில் வைத்துப் பாதுகாக்க வேண் டும் என்று தொலைநோக்கோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் 372 ஆவது பிரிவு ஜாதியைப் பாதுகாத்து நிற்பது பற்றியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பகுத்தறிவாளர் கழகங்கள் நாடெங்கும் கிளைகளை அமைத்து மக்கள் மத்தியில் பெரும் மாற்றங்களை உருவாக் கியது.
ராஜாஜி அவர்களே மிரண்டு, அரசு ஊழியர்கள் பகுத்தறிவாளர் கழகம் என்ற பெயரால் மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரங்களைச் செய்யலாமா? என்று பொருமி எழுதினார் என்றால், பகுத்தறிவாளர் கழகத் தின் தாக்கத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
20.11.1970-இல் புதிவு செய்யப் பட்ட சென்னை பகுத்தறிவாளர் கழகத்தில் மிகப் பெரிய பதவி களில் இருந்தவர்கள் எல்லாம் பொறுப்பாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் பங்கு பெற்றனர்.
தமிழக சட்டப் பேரவைச் செயலாளரான கா.து. நடராசன் தலைவர்; அரசு செயலாளர் களாக இருந்த வி.என். சுப்பையா, க. திரவியம், ஏ. பத்மநாபன் (பிற்காலத்தில் மிசோரம் ஆளுநராக இருந்து ஓய்வு பெற்றவர்) பேராசிரியர் சி.டி. ராஜேஸ்வரன் போன்ற பெரிய நிலையில் இருந்தவர்கள் எல்லாம் துணைத் தலைவர்களாகயிருந் தனர்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் புரவலராக இருந்தார் - இருக்கிறார்.
1976 நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டபோது அதிகார வர்க்கத்தில் இருந்த பார்ப் பனர்கள் இந்த அமைப்புக்கு ஆங்காங்கே தொல்லை கொடுத் தனர். இடையில் சிறிது காலம் தொய்வு ஏற்பட்டாலும் மீண்டும் எழுச்சி பெற்று அதன் பணி தொடர்கிறது.
இக்காலக் கட்டத்தில் அதன் பணிகள் புது முறுக்கோடு நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதற்கு அடையாளமாக இவ் வாண்டு தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள் (24.12.2007) அமைந்திருந்தன என்று குறிப்பிடலாம்.
சென்னை பெரியார் திடலில் முற்பகல் நடந்த கருத்தரங்கமும் சரி, மாலையில் நடைபெற்ற பகுத்தறிவு அரங்கமும் சரி வெகு சிறப்பாக அமைந்திருந்தன.
மதியம் அனைவருக்கும் உணவு ஏற்பாடு - என்று எல்லா வகையிலும் நேர்த்தியாக நிகழ்ச் சிகளை ஒழுங்குபடுத்தியிருந் தனர்.
பிற்பகல் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத்தின் செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. பகுத்தறிவு இதழ்களைப் பரப்புதல், கருத் தரங்குகளை நடத்துதல், வெளி மாநிலத் தொடர்புகளை ஏற் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் உருவாக்கப்பட்டன. பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பங்கு பெற்று கருத் துரைகளை வழங்கினார். வெகு சிறப்பாக செயல்படும் பகுத் தறிவாளர் கழகத் தலைவர் மதுரை வா. நேரு மாநிலப் பொதுச் செயலாளர் செயல்மிகு வீ. குமரேசன் ஆகியோரின் பணி களைப் பலபடப் பாராட்டினார்.
கருத்தரங்கம்
மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு அவர்கள் தலைமையில் நடை பெற்ற கருத்தரங்கில் சமூகச் சீரழிவிற்கு மிகுதியும் காரணமாக இருப்பது - சினிமா என்ற தலைப்பில் - இனமான கவிஞர் செ.வை.ர. சிகாமணி பத்திரிகை களே என்ற பொருளில் இனமான நடிகர் மு.அ. கிரிதரன், மதம் என்ற தலைப்பில் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், ஜாதி என்ற தலைப்பில் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்பாக உரை யாற்றினர்.
இந்த நாட்டைப் பீடித்த நோய்கள் அய்ந்து என்றும், பேய்கள் மூன்று என்றும் தந்தை பெரியார் கூறிய கருத்துகளை ஒட்டி ஆதாரப் பூர்வமாக எடுத்துரைத்தனர். குறிப்பாக சினிமாவும், ஏடுகளும் போட்டிப் போட்டுக் கொண்டு எப்படி வக்கிர ஆட்டம் போடுகின்றன என்பதை ஆதாரங்களுடன் விளக்கினர். ஜாதி மறுப்புத் திருமணத்தை ஈரோட்டில் பெரியார் சிலையின் கீழ் நின்று நடத்திக் கொண்ட எங்களுக்கு திராவிடர் கழகம்தான் அரவ ணைத்தது என்று தகடூர் தமிழ்ச்செல்வி உருக்கமுடன் கூறினார்.
தோழர் சி. மகேந்திரன்
நிறைவுரை ஆற்றிய இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் தோழர் சி. மகேந்திரன் உரை மிகவும் குறிப் பிடத்தக்கதாக அமைந்திருந்தது.
இந்த நாட்டில் இருக்கக் கூடிய எந்த அரசியல்வாதியும் தந்தை பெரியார் அவர்கள் கருத்தாக்கத்தின் பிரதிபலிப்பு இல்லாமல் அரசியல் நடத்த முடியாது; அப்படி நடத்த முயலப்படும் அரசியலும் கால் ஊன்றாது என்று உறுதிப்படக் கூறினார்.
பொதுவுடைமை என்பது அந்தந்த மண்ணுக்கேற்ப நடைபோட வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்ன கருத்து சரியானதே - இந்தியாவில் சமூக வளர்ச்சிக்கும், சமத்துவத்திற்கும் தடைக் கற்களாக உள்ளவற்றை ஆராயுங்கால் மதம், ஜாதி என்ற கட்டுமானத்தில் உருவாக்கப் பட்டுள்ளன. அதனை மிகச் சரியாக இனங் கண்டு போராடி யவர் பெரியார். தந்தை பெரி யாருக்கும், பொதுவுடைமையா ளர்களுக்கும் இருந்த நெருக்கம் கொள்கை ரீதியானது என்று எடுத்துரைத்தார்.
தமிழர் தலைவர்
மாலை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவரங்கத் திற்கு தமிழர் தலைவர் மானகிகு கி. வீரமணி அவர்கள் தலைமை யேற்றார்.
ஒரு மருந்து கண்டுபிடிக் கப்பட்டால் அது எப்படி உலகுக்கே சொந்தமோ, அது போன்றதே தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் என்று கூறினார். மத வெறிச் சக்திகளை முறியடிக்கும் மகத்தான மாமருந்து தந்தை பெரியார் அவர் களின் சிந்தனைகளே என்று உறுதிப்படக் கூறினார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு தொடக்கவுரை நிகழ்த்தினார். பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் வீ. கும ரேசன் வரவேற்புரையாற்றினர்.
இன்றைய கால கட்டத்தில் தந்தை பெரியார் சிந்தனைகள் தேவை குறித்து அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் சேனல் இடமருகு அவர்களும், விஜயவாடா நாத்திகர் மையத்தின் செயல் இயக்குநர் முனைவர் விஜயம் அவர்களும் கருத்தாழ மிக்க முறையில் உரையாற்றினர்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் கடவுள் இல்லை என்ற கூறுகிற நூல்கள் லட்சக் கணக்கில் பரவுகின்றன. இத் தகைய கருத்துகளை தந்தை பெரியார் அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே இங்கே முழங்கி இருக்கிறார் என்றார் சேனல் இடமருகு.
டாக்டர் விஜயம் பேசுகையில்:
மூடநம்பிக்கையை விரட்ட மட்டுமல்ல; வறுமையை விரட்ட வும் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துகள் தான் தேவை என்று அவர் தம் உரையில் அழுத்தம் கொடுத்தார்.
பெரியார் வலைக் காட்சி
உலகம் முழுவதும் உள்ள வர்கள் நேரிடையாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் பெரியார் வலைக் காட்சியினைத் (ஞநசலையச றுநகூஏ) தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்.
கவிஞர்களுக்கு பாராட்டு
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் 75-ஆவது ஆண்டு பிறந்தநாளையொட்டி வெளி யிடப்பட்ட ``காலம் வெல்லும் குறுந்தகடு உருவாக்கத்திற்கு உறு துணையாக இருந்த பாடல் களை இயற்றிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், பாவலர் அறிவுமதி, பழநிபாரதி, கபிலன், யுகபாரதி, நா. முத்துக்குமார் மற்றும் இசையமைப்பாளர் கவி ஆகி யோர் கருத்தரங்க நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர். தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார். நூலை வெளியிட்டார்
தந்தை பெரியார் 34-ஆம் ஆண்டு நினைவு நாள் கருத் தரங்கையொட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ``சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் எனும் நூல் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வங்கி அதிகாரி பால கிருஷ்ணன் தமிழில் இருந்து இந்தியில் மொழி பெயர்த் திருந்தார்.
ஆந்திர மாநிலம் நாத்திகர் மையத்தின் செயல் இயக்குநர் டாக்டர் விஜயம் தமிழர் தலைவர் எழுதிய சேது சமுத்திரத் திட்டம் என்ற நூலினை வெளியிட்டார். உ.பி. மாநிலம் மகாசூத்ரா அமைப்பைச் சேர்ந்த 4 பேர் பலத்த கைதட்டல்களுக் கிடையே பெற்றுக் கொண்டனர்.
தந்தை பெரியார் நினைவு நாள் என்றால் அது ஏதோ சம்பிரதாயமானதல்ல - சிந் தனைப் பூர்வமானது - முன் னெடுத்துச் செல்ல வேண்டிய வற்றை முறைப்படுத்தும் ஒரு எழுச்சி நாள் என்ற வகையில் எல்லா நிகழ்ச்சிகளும் அமைந் திருந்தன.
கடந்த ஆண்டும்கூட அய்யா நினைவு நாளை பகுத்தறிவாளர் கழகம்தான் ஏற்பாடு செய் திருந்தது. மீண்டும் முறுக்கேறி பணிகளைத் தொடங்கி விட்டது பகுத்தறிவாளர் கழகம் என்ற நம்பிக்கையை சென்னை நிகழ்ச்சி உறுதிப்படுத்தியது.
இதன் தாக்கம் குமரி முதல் திருத்தணி வரை தொடர்ந்திட ஆவன செய்வார்களாக!