Friday, May 05, 2017

திருமங்கலத்தில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் விழா, புதிய கல்விக் கொள்கை நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம்

திருமங்கலம், மே 5- உசிலம் பட்டி கழக மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் விழா, புதிய கல்விக் கொள்கை நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் திருமங்கலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

உசிலம்பட்டி கழக மாவட்ட ப.க. சார்பில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா புதிய கல்விக்கொள்கை நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து கருத்தரங்கம் 26.4.2017 மாலை 6 மணியளவில் திருமங்கலத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது.

இந்த விழாவில் மாவட்ட ப.க.செயலாளர் ஆசிரியர் ஜெ. சுப்பிரமணியன் அனைவரை யும் வரவேற்றார். மாவட்ட ப.க. தலைவர் அ.மன்னர் மன் னன் தலைமை வகித்து உரை யாற்றினார். தொடக்கத்தில் மதுரை மாநகர் மாவட்ட ப.க. தலைவர் முருகானந்தம். மேலூர் மாவட்ட ப.க. தலைவர் பால் ராசு, மாநில ப.க. துணைத் தலைவர் குருசாமி, உசிலம் பட்டி மாவட்டத் தலைவர் சிவா, மதுரை மண்டலச் செய லாளர் மா.பவுன்ராசா, அமைப் புச் செயலாளர் செல்வம், மாநில ப.க. தலைவர் வா.நேரு ஆகியோர் உரைக்கு பின்பு புதிய கல்விக்கொள்கை, நீட் நுழைவுத் தேர்வை கண்டித்து தமிழக அரசு, எதிர்கட்சி மற் றும் அனைத்துக்கட்சி எதிர்ப்பை மீறி மத்திய மோடி அரசு நீட் தேர்வை திணிக்க பார்க்கிறது என பல்வேறு கருத்துகளை சிறப்பான முறையில் விளக்கி உரையாற்றினார் மாநில ப.க. செயலாளர் மா.அழகிரிசாமி அவர்கள்.

நிறைவாக புரட்சி கவிஞர் ஒரு சிறந்த நாத்திக கவிஞர், தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை கவிதை வடி வில் வடித்து புரட்சி செய்தவர் கிராமங்கள் தோறும் புரட்சி கவிஞர் அவர்களின் தத்துவங் களை எடுத்து செல்ல வேண் டும் என சிறப்புரையாற்றினார் புலவர் அரவரசன் அவர்கள். நிறைவாக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் பா. செங்கதிர் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண் டவர்கள் பொதுக்குழு உறுப்பி னர்கள் பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் தனபாலன், மாநகர வட்ட ப.க. செயலாளர் பெரி.காளியப்பன், கவிஞர் பி.வேல்முருகன், கவிஞர் பன கல் பொன்னையா, த.மாயி, மகேஷ், முத்தையா, இராம சாமி, ஆட்டோ செல்வம், கனி, தொப்பி முருகேசன், சி. பிரபாகரன், இரா.பிரபாகரன், முத்துநாகு, ஆசிரியர் சுப்பிர மணியன், செங்கதில் ஏற்பாட் டில் 50க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் அரசு ஊழியர்கள் பங் கேற்றார்கள்

நன்றி : விடுதலை 05.05.2017







Saturday, April 29, 2017

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சங்பரிவார அமைப்புகள் செய்கின்றார்கள் மேலூர் பகுத்தறிவாளர் கலந்துரையாடல் கண்டனம் ....

மதுரை, ஏப். 29- மேலூர் கழக மாவட்ட பகுத்தறிவாளார் கழ கக் கூட்டம் 16.04.2017 ஞாயிற் றுக்கிழமை மாலை 6 மணிக்கு கூடல் நகரில் மாவட்ட பகுத்த றிவாளர் கழகத்தலைவர் பால் ராசு அவர்கள் இல்லத்தில் அவ ரது தலைமையில் நடைபெற்றது.
மேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகச்செயலாளர் வேம் பன் அனைவரையும் வரவேற் றார். மேலூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தலைவர் பால் ராசு தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.
நிகழ்வின் தொடக்க உரையினை பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை மா.அழகிரிசாமி ஆற்றி, கூட் டத்தின் நோக்கத்தினையும், சென்னையில் நடைபெற்ற மாநில பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்று வது பற்றியும், மாவட்ட அள வில் எப்படிப்பட்ட அணுகு முறைகளைக் கையாளவேண் டும் என்றும், இணையதளத் தைப் பயன்படுத்தி வாட்ஸ் அப், முக நூல், செல்பேசிகள் மூலம் செய்திகளைக் கொண்டு செல்வது போன்றவற்றின் மூலம் இயக்கப்பணிகள் ஆற்று வது பற்றியும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர்கள் விருதுநகர் கா.நல்லதம்பி, இராயகிரி கே.டி. சி.குருசாமி ஆகியோர் உரை யாற்றினர். தொடர்ந்து உரை யாற்றிய பகுத்தறிவாளர் கழ கத்தின் மாநில செயல்தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உழைப்பையும் உடல் நிலையையும் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டு, பகுத்தறிவாளர் கழகம் சிறப் பாக செயல்படவேண்டிய தேவையை வலியுறுத்தினார். இன்றைய சூழலில்  திராவிட இயக்கங்களுக்கு  மிகவும் திட் டமிட்டு பார்ப்பன இயக்கங் களும், அமைப்புக்களும் இடை யூறு கொடுப்பதையும் அதனை இன்றைக்கு எதிர்கொள்ள வேண்டிய நிலையில் திரா விடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றார்கள், அரும்பாடுபட்டு நாம் பெற்ற சமூக நீதிக்கு பங்கம் ஏற்படா மல் பாதுகாக்க வேண்டிய நிலை இருக்கிறது.
பார்ப்பனர்கள் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததுமுதலே, மிக வும் அநியாயமாக நடந்துகொள் கின்றார்கள், பெண்களுக்கு எதி ரான வன்முறைகள் சங் பரிவார அமைப்புக்கள் செய்கின்றார் கள், பசுவைப் பாதுகாக்கின் றோம் என்று சொல்லி மனி தர்களைக் கொல்கின்றார்கள். தமிழகத்தில் அவர்கள் ஒன்றும் காலூன்ற முடியவில்லை என் பதற்காக பலவிதமான சூழ்ச்சி வலைகளைப் பின்னுகின்றார் கள். அதனை அடையாளம் காட்டக்கூடிய இயக்கமாக நமது இயக்கம் இருக்கிறது. நமது தலைவர் ஆசிரியர் இருக் கின்றார். திட்டமிட்டு பணி யாற்றுங்கள், தொடர்ந்து பணி யாற்ற வேண்டிய காலம் இது என வலியுறுத்தி உரையாற் றினார்.
தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதியரசர் பொ. நடராசன் அவர்கள் தனது வாழ்வின் பல நிகழ்வுகளை எடுத்துக்கூறி, நமது இயக்க கூட்டங்கள் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படுகின்றன, அதற்கு வேண்டுமென்றே இடையூறு செய்பவர்களை, அதற்கு துணை போவார்களை சட்டப்படி எப்படி சந்திப்பது என்பதனை எடுத்துக்கூறினார். நிகழ்வின் நிறைவுரையை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு நிகழ்த் தினார்.
நிகழ்வில் திராவிடர் கழக மதுரை மண்டலத் தலைவர் அ.முருகானந்தம், செயலாளர் மா.பவுன்ராசா, மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் சே.முனிய சாமி, செயலாளர் அ.வேல் முருகன், அமைப்பாளர் ந.முரு கேசன், போட்டோ இராதா, மாணவரணித் தலைவர் எ.பிர பாகரன், மேலூர் மாவட்டத் தலைவர் மோதிலால், மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தலைவர் சுப.முருகானந்தம், செயலாளர் பெரி.காளியப்பன், துணைத் தலைவர் செல்ல.கிருட்டிணன், துணைச் செயலாளர்கள் பா.சடகோபன், செல்வசேகர், உசி லம்பட்டி மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தலைவர் சுப்பிர மணியன், மாவட்ட ஆசிரிய ரணி அமைப்பாளர் செங்கதிர், க.அழகர், மு.கனி, ஆட்டோ செல்வம், இணையதள செயற் பாட்டாளர் சுந்தர், வழக்குரை ஞர் தியாகராசன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பகுத்தறி வாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி சிறப்பாக நடை பெற தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

நன்றி : விடுதலை 29.04.2017





Saturday, April 22, 2017

தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா அனைத்து ஒன்றியத்திலும் நடத்தப்படும் தஞ்சை கலந்துரையாடலில் தீர்மானம்

தஞ்சை, ஏப். 22 9.4.2017 அன்று காலை 10.30 மணியள வில் தஞ்சை கீழவீதி பெரியார் இல்லத்தில், மாவட்ட பகுத்தறி வாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ப.க.தலைவர் ந.காமராசு தலைமை வகித்து உரையாற்றும்போது மார்ச் 5இல் மாநில கலந்துரையாடல் கூட்ட தீர்மானங்கள் குறித்தும், ஏப்ரல் 29 புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவை நடத்துதல் குறித்தும் உரையாற்றினார். மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல் அனைவரை யும் வரவேற்று பேசும்போது 2017 பிப்ரவரி 12இல் தஞ்சை யில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்புக் கருத்தரங்கத் தின் வரவு - செலவுகளை ஒப் படைத்து பேசினார். தொடர்ந்து மாநில ப.க. தலைவர் முனை வர் வா.நேரு பேசும்போது:_ பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகள் தஞ்சையில் எப்போதும் சிறப்பாகவே இருக் கும். நான் தஞ்சை வரும்போது உற்சாகம் பெறுகிறேன். கார ணம் இயக்கச் செயல்பாடுகள் தான். பொதுச்செயலாளர் மா.அழகிரிசாமி அவர்களின் தொடர்புகளால் மேலும் அமைப்பு வலிமை பெற் றுள்ளது என்றும், அதிக உறுப் பினர்களை, அதிகப்படுத்த வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்த நாடு இரா.குணசேகரன், மண் டல செயலாளர் மு.அய்யனார், பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், மாவட்ட துணை செயலாளர் ச.சந்துரு, மாவட்ட ப.க. துணை தலைவர் பி.ஆர்.வீரமணி, மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி அமைப் பாளர் ந.சங்கரன், ஒரத்தநாடு ஒன்றிய ப.க.தலைவர் கு.நேரு, மாவட்ட ப.க.அமைப்பாளர் ச.அழகிரி, மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநகர தலை வர் பா.நரேந்திரன், விடுதலை வாசகர் வட்ட மாநகர செய லாளர் மீ.அழகர்சாமி, மாநகர ப.க. செயலாளர் மா.இலக்கு மணசாமி, ஆசிரியர் மலர் மன்னன், மாவட்ட வழக்குரை ஞர்அணி தலைவர் இரா.சரவணகுமார், மாவட்ட ப.க. துணை செயலாளர் பொ.இராஜூ, மாநகர செயலாளர் சு.முருகேசன், ஒன்றிய மாண வரணி தலைவர் ச.திராவிட மணி, மாநகர மகளிரணி தலை வர் த.வள்ளியம்மை, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப் பாளர் சி.இரமேசு ஆகியோர் உரைக்குப்பின்னர் ப.க. பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி உரையாற்றும் போது: திராவிடர் கழகத்திற்கு வேராக இருப்பது பகுத்தறிவாளர் கழகம். ஏன் என்றால் திராவிடர் கழகம் வலிமையாக இருந்தால் சமூகநீதியும், பகுத்தறிவுப் பணியும் சிறப்பாக இருக்கும். அதற்கு நாம் அரசுத்துறையிலும், தனியார் நிறுவனத்திலும் பணியாற்றும் தோழர்களிடம் நம் பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும். இயக்க இதழ்களுக்கு அதிக சந்தாக் களைச் சேர்த்துத் தரவேண்டும். அதிக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று கூறினார். ப.க. மாவட்ட தலைவர் ந.காமராசு கூட்டத்தில் எடுக்கப் பட்டத் தீர்மானங்களை வாசித் தார்.
தீர்மானம் 1: 5.3.2017 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில கலந்துரையாடல் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு அதனை செயல்படுத் துவது என முடிவு செய்யப் படுகிறது.
தீர்மானம் 2: புரட்சிக் கவி ஞர்  பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் விழாவை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பில் அனைத்து ஒன்றியத்திலும் நடத்துவது எனவும் வரும் 29.4.2-017 அன்று தஞ்சையில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 3: பள்ளி கல்லூரி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிறப்பாக வெளிவரும் மாத இதழ்கள் பெரியார் பிஞ்சு, தி மார்டன் ரேசனலிஸ்ட் ஆகிய இதழ் களுக்கு சந்தாக்கள் சேர்ப்பது எனவும், 2017 சூன் மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி யாக சென்று ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 4: மூன்று மாதத் திற்கு ஒரு முறை அவசியமாக மாவட்ட, ஒன்றியப் பொறுப் பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 5: பிப்ரவரி 12இல் தஞ்சையில் நடைபெற்ற புதியக்கல்விக் கொள்கை, நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்புக் கருத்தரங்கத்தின் வரவு - செலவு சரி பார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நன்றி : விடுதலை 22.04.2017

Sunday, April 16, 2017

மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்......

மதுரை, ஏப். 8- மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம், பகுத்தறிவு ஆசிரியரணி  கலந்துரையாடல் கூட்டம் 1.4.2017 அன்று மாலை 6 மணி அளவில் மதுரை சிம்மக்கல் அருகில் உள்ள  முருகானந்தம் பழக்கடை-எஸ்.ஏ.எஸ். அரங் கில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கத்தலைவர்  சுப.முருகானந்தம் தலைமையேற்றார். அனைவ ரையும் வரவேற்று பகுத்தறிவா ளர் கழக மாவட்டச் செயலாளர் பெரி.காளியப்பன் உரையாற் றினார்.

நிகழ்வின் தொடக்க உரையை நிகழ்த்திய பகுத்தறிவாளர் கழக மாநிலப்பொதுச்செயலாளர் மா.அழகிரிசாமி சென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநிலக்கலந்துரையாடல் கூட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பகுத்தறி வாளர் கழகப்புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கு பெற்று ஏறத்தாழ 32 மாவட் டங்களிலிருந்து வந்திருந்த தோழர்களின் உரையினை செவி மடுத்ததையும், நிறைவாக பல் வேறு செயல்பாடுகளை நமக்கு வகுத்து கொடுத்ததையும் நினை வுபடுத்தினார். இன்றைய நிலை யில் நாம் செயல்படவேண்டிய தளம் என்பது பல நிலைகளில் இருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு, புதிய கல் விக்கொள்கை எதிர்ப்பு, கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். புகுத்தும் கொள்கைகளுக்கு எதிர்ப்பு எனப் பல நிலைகளில் நாம் போராடிக் கொண்டிருக் கிறோம். தமிழர் தலைவர் அவர்கள் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பகுத் தறிவாளர் கழகம் இந்தக்கால கட்டத்தில் மிகச்சிறப்பாக செயல்படவேண்டும். மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அரங்கக் கூட்டங்கள் மாதந்தோறும் நடக்கவேண் டும். உறுப்பினர்கள் சேர்க்கப் படவேண்டும். மாநிலக் கலந் துரையாடல் கூட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந் தும் பொறுப்பாளர்கள் கட்டா யம் கலந்துகொள்ள வேண்டும். மதுரை மாநகர் மாவட்டத்திற் குத் தனியாக வாட்ஸ் அப் குழு அமைக்கப்பட வேண்டும். வாட்ஸ் அப்,பேஸ்புக் போன்ற வற்றில் தொடர்ந்து நாம் செயல்படவேண்டும் எனப் பல்வேறு எடுத்துக்காட்டுக்க ளோடு எடுத்துரைத்தார்.

நிகழ்வுக்கு முன்னிலை ஏற்ற மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் தனது உரையில்: ஆசிரியர் அவர்கள் இந்த வயதி லும் அயராது உழைத்துக் கொண் டிருக்கின்றார். நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் ஆசிரியர் கலந்துகொண்ட நிகழ் வுகளின் சிறப்புக்களை குறிப் பிட்டார். திருநெல்வேலியில்   பிரம்மநாயகம் அவர்களின் வீட்டிற்குச்சென்றதையும் அங்கு நடைபெற்ற உரையா டல்களையும் எடுத்துக்கூறி, தொண்டர்களை மனதில் இருத்தி, அவர்களுக்கு சிறப் பும், மரியாதையும் செய்யும் ஆற்றல்மிக்க தலைவர் ஆசிரி யர் அவர்களின் தலைமையின் கீழ் நாம் பணியாற்றுகின்றோம். அந்த உணர்வோடு நமது தோழர் கள் பணியாற்றவேண்டும். பகுத் தறிவாளர் கழகத்தைப்பொறுத்த அளவில் மதுரை மாநகரில் தொடர்ந்து கருத்தரங்குகளை நடத்துங்கள். நாங்கள் துணை நிற்கின்றோம் எனக் குறிப்பிட் டார்.

தொடர்ந்து   மதுரை மண்ட லத்தலைவர் அ,முருகானந்தம்,  மாதந்தோறும் நடத்தப்பட இருக்கும் கருத்தரங்கத்திற்கு இடத்தை அளிக்கிறேன் என்றார். ஓய்வுபெற்ற நீதியரசர் நடராசன் ஒலிபெருக்கி எனது பொறுப்பு எனச்சொல்லி பல்வேறு ஆலோசனைகளைக் கூறினார். மதுரை மாநகர் மாவட்ட தலை வர் சே.முனியசாமி கருத்தரங் கத்திற்கு பண உதவி அளிக்கி றேன் எனத் தோழர்களை உற் சாகப்படுத்தினார்.

மதுரை மண்டலச் செயலா ளர் மா.பவுன்ராசா, மேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கத் தலைவர் பால்ராசு, செயலா ளர் வேம்பன்,ஆசிரியர் கார்த்தி கேயன், சேகர், பா.சடகோபன், செல்ல கிருட்டிணன் ஆகியோர் தங்கள் கருத்துகளை எடுத்து ரைத்தனர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவர் கே.டி.சி.க.குருசாமி அவர்கள் மதுரை மாநகர் மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழகம் சிறப் பாகச் செயல்படவேண்டும் என வேண்டுகோள் வைத்தார். தனது ஊரான இராயகிரியில் தொடர்ந்து நடைபெறும் இயக் கச்செயல்பாடுகளை எடுத்து ரைத்தார்.

மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் சி.இர மேசு அவர்கள் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இருக்கும் வாய்ப்பையும், பகுத்தறிவு ஆசிரியர் அணியை  இந்த மாவட்டத்தில் கட்டமைக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். நீட் தேர்வு என்னும் இந்தத்தேர்வினை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட வகுப்பினைச்சேர்ந்தவர் கள் அபாயம் புரியாமல் - தீவி ரமாக எதிர்க்காமல் இருப்பதா கக்  குறிப்பிட்டார். நமக்கு கிடைத் திருக்கும் கொஞ்ச நஞ்ச வாய்ப் பையும் குழிதோண்டிப்புதைப் பது இந்த நீட் தேர்வு என்ப தனை மிக விளக்கமாக எடுத் துக்காட்டுக்களோடு குறிப்பிட் டார். பகுத்தறிவு ஆசிரியரணி இந்த மாவட்டத்தில் சிறப்பாக செயல்படவேண்டும்  எனக் குறிப்பிட்டார்.

நிறைவாக உரையாற்றிய பகுத்தறிவாளர் கழகத்தலைவர் முனைவர் வா.நேரு, பெரியா ரியம் என்னும் மிகப்பெரிய கொள்கை நமக்கு கிடைத்திருக் கிறது. அதனை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில்- உலகளவில் பரப்பும் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நமக்கு கிடைத்திருக்கின்றார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களாகிய உழைக்கும் மக்களை நம்மால்மட்டுமே ஒருங்கிணைக்க இயலும். பிறந்த சாதியின் பெருமையை பேசச்சொல்லி ஆர்.எஸ்.எஸ். சும்,   பி.ஜே.பி.யும் சொல்லிக் கொடுக்கின்றார்கள். ஆண்ட பரம் பரை எனப்பெருமை பேசுங்கள் எனத் தாழ்த்தப்பட்ட, பிற்ப டுத்தப்பட்ட மக்களுக்கு சொல் லிக்கொடுத்து பின்பு அவர்க ளுக்குள் சண்டையையும் பார்ப் பன அமைப்புகள் ஏற்படுத்து கின்றன. எந்த சாதியில் பிறந் திருந்தாலும் நமக்கு இருக்கும் இழிவைத்துடைத் தெறிந்து மனிதர்களாக, திராவிடர்களாக ஒன்றிணையச் சொல்வது பெரி யாரியக்கம். அமைச்சர்களை மேடையில் வைத்துக்கொண்டு, சாஸ்திரப்படி, சட்டப்படி நீங் களெல்லாம் மாண்புமிகு தேவ டியாள் மகன்கள், நாங்களெல் லாம் சாதாரண தேவடியாள் மகன்கள் எனக்குறிப்பிட்டு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இழிவினைத்துடைத் தெறிய வேண்டும் என்றவர் தந்தை பெரியார். இன்றைய காலகட்டத்தில் பெரியாரியல் வாதிகளான நாம், பொதுவு டமை வாதிகள், அம்பேத்காரிய வாதிகள் அனைவரும் ஒன்று பட்டு போராடவேண்டிய நேரம். பொது எதிரியாக இன்றைக்கு பார்ப்பன மேலாண்மையைச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ்.ம் அதனுடைய பரிவார அமைப் புக்களும் இருக்கின்றன. எனவே நாம் ஒன்றிணைய வேண்டும். சின்னச்சின்ன அளவில்கூட நமது கருத்துக்களை தொடர்ந்து பரப்பவேண்டும். உண்மையி லேயே புரட்சிகரமான இயக் கம் என்றால் அது நமது இயக் கம்தான். ‘தொட்டில் தொடங்கி சுடுகாடு வரைக்கும் வாழ்க்கை சடங்குகளாலேயே கனக்கிறது‘ என்றார் அண்மையில் மறைந்த கவிஞர் இன்குலாப். பெரியா ரியல்வாதிகள் கடவுளை மறுப் பவர்கள், சாதியை ஒழிக்க வேண்டும், மதத்தை ஒழிக்க வேண்டும் எனச்சொல்பவர்கள் மட்டுமல்ல; சடங்குகளை மறுப்பவர்கள்! சடங்குகளை மறுப்பவர்களைத்தான் பார்ப்பனர்கள் உண்மையான எதிர்ப்பாளர்களர்களாகக் கருதுகிறார்கள். இன்றைக்கு நமது பணி இன்றியமையாத பணி - தொடர்ந்து செயல்பட வேண்டும். மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கப்பொறுப்பாளர்கள் சிறப்பாக செயல்படுவதாக அறிவித்திருக் கின்றார்கள். புதிய பொறுப்பா ளர்களும் அவர்களோடு இணைந்து பணியாற்றவேண்டும். மாதந்தோறும் கருத்தரங்குகள் நடத்தவேண்டும். மாநில ஆசி ரியரணிப்பொறுப்பாளராக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் சி.இரமேசின் மணமேடையிலேயே அறிவித்தார்கள். நல்ல பேச்சாளர் அவர். பகுத் தறிவாளர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் மா.அழகிரி சாமி ஓய்வுபெற்ற கல்வி அதி காரி. மிக நன்றாக தோழர்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்கின்றார். தமிழர் தலைவர் அவர்களின் எண்ணங்களை ஒன்றிணைந்து செயல்பட்டு நிறைவேற்றுவோம் என உரை யாற்றினார். .

தீர்மானங்கள்

1) பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை செயல்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

2) பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு ஆசிரியரணிக்கு புதிய உறுப்பினர்களைச்சேர்ப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

3) புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங் கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

4) தி மாடர்ன் ரேசனலிஸ்டு, விடுதலை, உண்மை,பெரியார் பிஞ்சு இதழ்களுக்கு சந்தா சேர்ப் பது என முடிவு செய்யப்பட்டது.

கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டனர்

உசிலம்பட்டி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணித் தலைவர்: அய்யனார்குளம் சி.ஏ.தனுஷ்கோடி (ஆசிரியர்)

செயலாளர்:  செக்கானூரணி பா.செங்கதிர்

மதுரை மாநகர் மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர்: இராம. அழ.கார்த்திகேயன்

மதுரை மாநகர் மாவட்டபகுத்தறிவாளர் கழகம்:

தலைவர் : சுப.முருகானந் தம்

துணைத்தலைவர்கள்: செல்ல.கிருட்டிணன்,    சு.மோதிலால்

செயலாளர் : பெரி.காளி யப்பன்,

துணைச்செயலாளர்கள் : காளி. செல்வசேகர், புத்துகத் தூதன் பா.சடகோபன்

நிறைவாக மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச்செயலாளர்  பா.சட கோபன் நன்றியுரை கூறினார்

நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட கழகச்செயலாளர் அ. வேல்முருகன், மேலூர் மாவட் டத் தலைவர் மோதிலால், செயலாளர் எரிமலை, உசி லம்பட்டி மாவட்டத்தலைவர் சிவகுருநாதன், வழக்கறிஞர் கணேசன், திருப்பரங்குன்றம் அழகர்சாமி, விராட்டிபத்து ந. முருகேசன், பீபிகுளம் பிச்சைப் பாண்டி, சுரேஷ், ஆட்டோ செல் வம், மளிகைக்கடை மாரிமுத்து, புதூர் பாக்கியம், மு.கனி, வடக்குமாசி வீதி செல்லத்துரை, அழகுபாண்டி, கதிரேசன்-அவரது மகள் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகுத்தறி வாளர் கழக - பகுத்தறிவு ஆசிரியரணியின் பொறுப்பாளர் களின் மாநில கலந்துரையாடல் கூட்டம் ....

சென்னை, பெரியார் திடலில் 5.3.2017 அன்று பகுத்தறி வாளர் கழக - பகுத்தறிவு ஆசிரியரணியின் பொறுப்பாளர் களின் மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மாலை 5.15 மணிக் குத் தொடங்கி நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர்  கி.வீரமணி தலைமை வகித்தார்.



மாநிலம் முழுவதிலுமிருந்து பொறுப்பாளர்கள் மிக அதிக அளவில் கூட்டத்தில் பங்கேற்று, (ஏறக்குறைய 90 தோழர்கள்) உரையாடியது பகுத்தறிவாளர் கழக - பகுத்தறிவு ஆசிரியரணி செயல்பாட்டில் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் ஈடுபாட்டை, அக்கறையினைக் காட்டுவதாக இருந்தது.

ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளரும் கடந்த கால செயல்பாடுகள், வருங்காலத் திட்டங்கள் பற்றி மிகச் சுருக்க மாக எடுத்துரைத்தனர். பகுத்தறிவு ஆசிரியரணியின் பொறுப் பாளர்கள் தங்களது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து, அதன் நடைமுறைக் கான வழிமுறைகளையும் வழங்கினார்கள்.

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர்

தமிழர் தலைவரின் வழி காட்டும் நெறியுரை

கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமை வகித்த கழகப் புரவலர் தமிழர் தலைவர் தமது நிறைவுரையில் குறிப்பிட்ட தாவது:

பகுத்தறிவாளர் கழகம், இயக்கத்தின் பிரச்சாரப் பணியில் ஒரு தனித்துவமான தளத்தில்  செயல்படவேண்டுமென்ற சீரிய நோக்கத்தில் தந்தை பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட அமைப்பாகும். அரசமைப்புச் சட்டத்தில், நெருக்கடி காலத் தில் (1976இல்) சேர்க்கப்பட்ட குடிமக்களின் அடிப்படைக் கட மைகளாக (திuஸீபீணீனீமீஸீtணீறீ ஸிவீரீலீts)  வலியுறுத்தப்பட்டவை களை தொலைநோக்கோடு 1971ஆம் ஆண்டிலேயே செயல் திட்டமாக - பரப்புரை பணியாகக் கொண்டு தந்தை பெரியார் பகுத்தறிவாளர் கழகத்தினை உருவாக்கினார். அடிப்படைக் கடமைகளுள் ஒன்றான விதி 51 கி(லீ) படி அறிவியல் மனப்பான்மையினை வளர்த்தல், ஏன் எதற்கு என வினா எழுப்பி வினையாற்றுதல், மனித நேயம் பேணுதல், சீர்திருத்தச் சிந்தனைகளை வளர்த்துப் பெருக்குதல் ஆகிய கடமைகளை நடைமுறைத் திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமைப்பு பகுத்தறிவாளர் கழகம் ஆகும். குறிப்பாக பகுத்தறிவு ஆசிரியரணியின் பணிகள் இன்னும் சிறப்பானவை. குடிமக்களின் அடிப்படை கடமைகளை இளம் நெஞ்சங்களில் பதித்து வருங்காலத்தில் சமுதாயப் பொதுக் கடமை மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்கிடும் பணியினைச் செய்து வருகிறார்கள்.

மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள், மனித ஆற் றலை, பொருளாதார நிலையினை சீரழித்து வரும் இன்றைய சூழலில், பகுத்தறிவாளர் கழகத்தின் பணி பரந்துபட்டு சுழன்று நடைபெற வேண்டும். ஒவ்வொரு பொறுப்பாளரும், தோழ ரும் ஒரு நடமாடும் பிரச்சாரக் கருவியாகவே தங்களைக் கருதி செயல்பட முன்வரவேண்டும். பிரச்சாரப் பொறியினைத் தட்டிவிட்டு, அதுகுறித்த சிந்தனையில் உள்ளோரை ஆழமாக கருத்துகளில் ஆட்படுத்த, இயக்க இதழ்களை அவர்கள் படிக்கும் வாய்ப்பினை உருவாக்கிட வேண்டும். தங்கள் பகுதியில் சிறு நூலகங்களை அமைத்து இயக்க ஏடுகளை வருவித்து பொதுமக்கள் படித்துப் பயன்பெறும் வகையில் செயல்படலாம். கருத்தரங்கங்கள் நடத்தி அறி வார்ந்த சிந்தனை வட்டத்தினை சிறிய அளவிலே உருவாக் கிட முன்வரலாம். பகுத்தறிவாளர் கழகத்தின் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஏதேனும் ஒரு அலுவலகப் பணியில் உள்ள நிலையில், திட்டமிட்டு - நேரம் ஒதுக்கி செறிவாகச் செயல்பட முன்வரவேண்டும்.

ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை சார்ந்த மத விழாக்களைப் பற்றிய அறிவியல் ஆதாரமற்ற, அர்த்தமற்ற போக்கினைக் குறித்து முன் திட்டத்துடன் பிரச்சாரம் செய்யலாம். அவை பற்றிய பிரசுரங் களை, தலைமையிடத்தில் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களை பொது மக்களிடம் பரவலாக வழங்கலாம். அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற நுண் பரப்புரை திட்டத்தை (விவீநீக்ஷீஷீ றிக்ஷீஷீஜீணீரீணீஸீபீணீ றிக்ஷீஷீரீக்ஷீணீனீனீமீ) பொறுப்பாளர்கள் உருவாக்கிக் கொண்டு செயல்பட்டால் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடு மேலும் செம்மைப்படும். பொறுப்பாளர்கள் இத்தகைய அணுகு முறையுடன் செயல்படும் வழக்கத்தை வாடிக்கையாக்க வேண்டும்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பிரச்சாரப் பணியில் எளிமையாக கருத்துகளை எடுத்துச் சொல்லும் வழிமுறைகளை விளக்கினார். ஒவ்வொரு பகுதி யிலும் அங்குள்ள தோழர்கள் ‘பகுத்தறிவுப் பலகை’யினை பொது இடத்தில் நிறுவி, நாள்தோறும் பொருத்தமான பகுத்தறிவுக் கருத்துகளை, தந்தை பெரியாரின் பொன்மொழி களை எழுதினால் அவை ஒரு பெரிய தாக்கத்தினை ஏற் படுத்தும் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.





கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, செயல் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி, திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் - அண்ணா. சரவணன், கே.டி.சி.குருசாமி, கா.நல்லதம்பி, மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் மா.அழகிரி சாமி, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.ரமேசு, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர்.

உரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர்கள்: சு.திருமா வளவன் (திருநெல்வேலி), எஸ்.கரிகாலன் (திருவாரூர்), கோபு.பழனிவேல் (தஞ்சாவூர்), டி.இருதயராஜ் (கும்மிடிப்பூண்டி), தங்க.சிவமூர்த்தி (அரியலூர்), டாக்டர்  எஸ்.டி.இரத்தினசபாபதி (தென் சென்னை), வா.தமிழ்ப் பிரபாகரன் (ஆத்தூர்), சி.மெர்சி ஆஞ்சலாமேரி (பழனி), அ.சிவக்குமார் (செங்கல்பட்டு), மா.இராசய்யா (தென்காசி), உ.சிவதாணு (கன்னியாகுமரி), அ.சரவணன் (புதுக்கோட்டை), புயல் சு.குமார் (திருத்துறைப் பூண்டி), நெ.நடராசன் (புதுச்சேரி), ஆசிரியரணி சே.ஜானகி ராமன் (திருப்பத்தூர்), ஜி.எஸ்.எஸ்.நல்லசிவன் (ராச பாளை யம்), ச.வெங்கட்ராமன் (தூத்துக்குடி), இரா.இராமதுரை (ஆவடி), அ.சாமிதுரை (மயிலாடுதுறை), கோவி.அன்புமதி (மேட்டூர்), பேராசிரியர் ப.சம்பத் (நாமக்கல்), க.வெங்கடேசன் (திருப்பத்தூர்), கி.கார்வண்ணன் (விழுப்புரம்), ஆசிரியர் கி.எழில் (திருவள்ளூர்), கோ.பாலசுப்பிரமணியன் (லால்குடி), இரா.முத்துகிருட்டிணன் (நாகப்பட்டிணம்), அய்.லூயிஸ்ராஜ் (கிருட்டிணகிரி), மணிவண்ணன் (லால்குடி)

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானம்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர், கொடையாளர், பகுத்தறிவு பரப்பலுக்கும், பயிற்சி முகாமிற்கும் உற்ற துணையாக இருந்த, தமிழர் தலைவர் மேல் எந்நாளும் பாசம் கொண்டிருந்த அய்யா வி.கே.யென். கண்ணப்பன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் இக்கூட்டம் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

ள தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகமெல்லாம் கொண்டு செல்லும் தமிழர் தலைவர், தந்தை பெரியாருக்குப் பின்னால், அன்னை மணியம்மையாருக்குப் பின்னால் திராவிடர் கழகத்தைக் கட்டிக்காப்பாற்றி வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பரப்புரை பயண ஊர்தியினை வழங்கிட ஏற்பாடுகள் செய்த திராவிடர் கழக மாநில இளைஞரணி, மாணவரணிக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, முதன்முதலில் பரப்புரை பயண ஊர்திக்காக  நன்கொடைகளை அளித்து ஊக்கமூட்டிய பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கு நன்றியை, பாராட்டை இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

அ) ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் (ழிணிணிஜி) நுழைவுத்தேர்வுக்கு தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்கும் தமிழ் நாடு சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை உடனே வழங்க கேட்டுக்கொள்கிறது.

ஆ) மாவட்ட அளவில் , பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பாக புதிய கல்விக்கொள்கை எனும் பெயரில் வரும் குலக் கல்வித்திட்டத்தினை விளக்கி கருத்தரங்குகள் நடத்த முடிவு செய்யப்படுகிறது.

ள பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவினை ஏப்ரல்-29 அல்லது அதனை ஒட்டி நடத்த முடிவு செய்யப்படுகிறது.

ள முகநூல் (திணீநீமீதீஷீஷீளீ), கட்செவி (கீலீணீtsணீஜீஜீs), சுட்டுரை (ஜிஷ்வீttமீக்ஷீ), வலைத்தளம் (மிஸீtமீக்ஷீஸீமீt) போன்றவற்றை பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள் நன்கு கையாள வேண்டும். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைப்படி நமது இயக்கத்தினைப் பற்றிய விமர்சனப் பதிவுகளுக்கு நமது எதிர்ப்பினை நாகரீகமாகவும், ஆதாரங்களோடும் ஆணித்தர மாகவும் விளக்கமளிக்க வேண்டும். அதற்கான இணைய பயிற்சி முகாம்களை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக நடத்திட வேண்டுமெனத் தீர்மானிக்கப்படுகிறது.

ள இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பகுத்தறிவாளர் கள் கொல்லப்படுவது இந்த ஆட்சியில் தொடர்கின்றது. மராட் டியப் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வில்லை, தண்டிக்கப்படவில்லை; நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி போன்றவர்களின் படு கொலைக்கு காரணமானவர்களை கைதுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.

ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து விதிகளுக்கு மாறாக கட்டிடங்கள் கட்டும் கார்பரேட் சாமியார்களின் நிகழ்ச்சிகளில் பிரதமர், முதல்வர், ஆளுநர் போன்றவர்கள் கலந்துகொள்வது நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானதாகும். “ஜாக்கிரதை, ஜாக்கிரதை, சாமியார்கள் ஜாக்கிரதை”  எனத் திராவிடர் கழகம் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிரச் சாரம் செய்துவருகின்றது. ஆட்சியாளர்களின் உதவியோடு வலம் வரும் கார்பரேட் சாமியார்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திட கருத்தரங்குகள் நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

ள அரசு அலுவலங்களில் கடவுளர் படங்களை வைப்பதும், போலீஸ் உடுப்போடு சாமியாடுவதும் தீ மிதிப்பதுவும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. அவர்கள் மீது சட்டப்படி துறைரீதியான நடவடிக்கை எடுக்க மாநில அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ள தமிழக அரசின் பாடத்திட்டங்களில் உள்ள மூட நம் பிக்கை சார்ந்த பாடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. பெண் உரிமை சார்ந்த பாடங்களை பாடத்திட்டங்களில் சேர்க்கவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ள அறிவியல் கண்டுபிடிப்புக்களான ஊடகங்கள், பேய்-பிசாசு, பாம்பு பெண் போன்ற தொடர்களையும், ஜோதிடம் போன்ற அறிவியலுக்குப்  புறம்பான கருத்துகளையும் பரப் புவதை நிறுத்தவேண்டும் எனக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ள கர்நாடக அரசு போல மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத் தினை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென  இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ள ஜெர்மனி மாநாடு: ஜெர்மனி நாட்டு கொலோன் பல் கலைக்கழகத்தில் ஜூலை 27, 28 மற்றும் 29, 2017 ஆகிய மூன்று நாள் பன்னாட்டு பெரியாரியல் சுயமரியாதை இயக்க மாநாடு (மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ சிஷீஸீயீமீக்ஷீமீஸீநீமீ ஷீஸீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ ஷிமீறீயீ-ஸிமீsஜீமீநீt விஷீஸ்மீனீமீஸீt) நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள், நாத்தி கர்கள், மதச் சார்பற்ற சுதந்திர சிந்தனையாளர்கள் என பல தரப்பினரும் அமைப்பு ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர். பகுத்தறிவாளர் கழகத்திலிருந்து தோழர்கள் பலரும் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்றிடவும், உலக அளவில் முதன் முறையாக சுயமரி யாதை இயக்க மாநாடு நடைபெற உள்ளதை பரந்த அளவில் பரப்புர செய்திடவும் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

தீர்மானங்களை புலவர் இரா.சாமிநாதன் (திண்டிவனம்), அ.தா.சண்முக சுந்தரம் (தாம்பரம்) ஆகியோர் முன்மொழிய அனைவரும் கரவொலி எழுப்பி வழி மொழிந்தனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் வடசென்னை மாவட்டத் தலைவர் கோவி.கோபால் வரவேற்புரை ஆற்றிட நிறைவாக வடசென்னை ஆ.வெங்கடேசன் நன்றி கூறினார்.

பங்கேற்ற பொறுப்பாளர்கள்


மற்றும் தோழர்கள்:

விழுப்புரம் மாவட்ட செயலாளர் வே.ரகுநாதன், லால்குடி பொருளாளர் வீ.சுப்ரமணியன், புதுச்சேரி மாவட்ட துணைத் தலைவர் கு.ரஞ்சித்குமார், புள்ளம்பாடி எஸ்.பொற்செழியன், கோபி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் அ.குப்புசாமி, திருவள்ளூர் கே.தேசன், ஆவடி மாவட்டம் ஆ.வெ.நடராசன், கூடுவாஞ்சேரி மா.இராசு, வடசென்னை மாவட்ட செயலாளர் பா.இராமு, திண்டிவனம் மாவட்ட செயலாளர் சா.மாரிமுத்து, மறைமலை நகர் தலைவர் மு.பிச்சைமுத்து, வேலூர் ச.பாஸ்கரன், விருகம்பாக்கம் மரு.வேல்துரை, சென்னை கோ.கண்ணன், ஆத்தூர் ச.வினோத்குமார், ஆத்தூர் ப.கோபிநாத், ஆத்தூர் மாவட்ட அமைப்பாளர் அ.அறிவுச் செல்வம், சேலம் கூ.செல்வம், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் பொ.இராஜி, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ச.அழகிரி,  தஞ்சை மாவட்டம் விடுதலை வாசகர் வட்ட தலைவர் த.வெற்றிவேந்தன், சேலம் இரா.கண்ணன், ஆவடி மாவட்ட செயலாளர் வே.பன்னீர் செல்வம், ஒரத்தநாடு பூவை.முருகேசன், தென் சென்னை மாவட்ட செயலாளர் பேராசிரியர் எஸ்.அருட்செல்வன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் மு.இரா.மாணிக்கம், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் மு.இரா.மாணிக்கம், தென் சென்னை கி.வினோத்குமார், இராச பாளையம் மாவட்ட மேனாள் செயலாளர் அ.போ.கங்காதரன், கும்மிடிப்பூண்டி அமைப்பாளர் வி.ராஜபோஸ், புழல் பிரேம் குமார், திருவண்ணாமலை பா.வெங்கட்ராமன், திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.சிவக்குமார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்.



பகுத்தறிவாளர் கழகப்

பொறுப்பாளர்கள்

தலைமையிடம்

மாநில துணைச் செயலாளர்:

ஆ.வெங்கடேசன்

கும்முடிப்பூண்டி மாவட்டம்

தலைவர்: டி.இருதயராஜ்,

செயலாளர்: பாஸ்கரன்

தருமபுரி மாவட்டம்

தலைவர்: கதிர்.செந்தில்குமார்

துணைத் தலைவர்: இர.கிருட்டிணமூர்த்தி

செயலாளர்: மாரி.கருணாநிதி

திருவள்ளூர் மாவட்டம்

தலைவர்: கி.எழில்

செயலாளர்: ந.அறிவுச்செல்வன்

திருவண்ணாமலை மாவட்டம்

தலைவர்: பா.வெங்கட்ராமன்