Sunday, April 16, 2017

மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்......

மதுரை, ஏப். 8- மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம், பகுத்தறிவு ஆசிரியரணி  கலந்துரையாடல் கூட்டம் 1.4.2017 அன்று மாலை 6 மணி அளவில் மதுரை சிம்மக்கல் அருகில் உள்ள  முருகானந்தம் பழக்கடை-எஸ்.ஏ.எஸ். அரங் கில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கத்தலைவர்  சுப.முருகானந்தம் தலைமையேற்றார். அனைவ ரையும் வரவேற்று பகுத்தறிவா ளர் கழக மாவட்டச் செயலாளர் பெரி.காளியப்பன் உரையாற் றினார்.

நிகழ்வின் தொடக்க உரையை நிகழ்த்திய பகுத்தறிவாளர் கழக மாநிலப்பொதுச்செயலாளர் மா.அழகிரிசாமி சென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநிலக்கலந்துரையாடல் கூட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பகுத்தறி வாளர் கழகப்புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கு பெற்று ஏறத்தாழ 32 மாவட் டங்களிலிருந்து வந்திருந்த தோழர்களின் உரையினை செவி மடுத்ததையும், நிறைவாக பல் வேறு செயல்பாடுகளை நமக்கு வகுத்து கொடுத்ததையும் நினை வுபடுத்தினார். இன்றைய நிலை யில் நாம் செயல்படவேண்டிய தளம் என்பது பல நிலைகளில் இருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு, புதிய கல் விக்கொள்கை எதிர்ப்பு, கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். புகுத்தும் கொள்கைகளுக்கு எதிர்ப்பு எனப் பல நிலைகளில் நாம் போராடிக் கொண்டிருக் கிறோம். தமிழர் தலைவர் அவர்கள் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பகுத் தறிவாளர் கழகம் இந்தக்கால கட்டத்தில் மிகச்சிறப்பாக செயல்படவேண்டும். மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அரங்கக் கூட்டங்கள் மாதந்தோறும் நடக்கவேண் டும். உறுப்பினர்கள் சேர்க்கப் படவேண்டும். மாநிலக் கலந் துரையாடல் கூட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந் தும் பொறுப்பாளர்கள் கட்டா யம் கலந்துகொள்ள வேண்டும். மதுரை மாநகர் மாவட்டத்திற் குத் தனியாக வாட்ஸ் அப் குழு அமைக்கப்பட வேண்டும். வாட்ஸ் அப்,பேஸ்புக் போன்ற வற்றில் தொடர்ந்து நாம் செயல்படவேண்டும் எனப் பல்வேறு எடுத்துக்காட்டுக்க ளோடு எடுத்துரைத்தார்.

நிகழ்வுக்கு முன்னிலை ஏற்ற மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் தனது உரையில்: ஆசிரியர் அவர்கள் இந்த வயதி லும் அயராது உழைத்துக் கொண் டிருக்கின்றார். நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் ஆசிரியர் கலந்துகொண்ட நிகழ் வுகளின் சிறப்புக்களை குறிப் பிட்டார். திருநெல்வேலியில்   பிரம்மநாயகம் அவர்களின் வீட்டிற்குச்சென்றதையும் அங்கு நடைபெற்ற உரையா டல்களையும் எடுத்துக்கூறி, தொண்டர்களை மனதில் இருத்தி, அவர்களுக்கு சிறப் பும், மரியாதையும் செய்யும் ஆற்றல்மிக்க தலைவர் ஆசிரி யர் அவர்களின் தலைமையின் கீழ் நாம் பணியாற்றுகின்றோம். அந்த உணர்வோடு நமது தோழர் கள் பணியாற்றவேண்டும். பகுத் தறிவாளர் கழகத்தைப்பொறுத்த அளவில் மதுரை மாநகரில் தொடர்ந்து கருத்தரங்குகளை நடத்துங்கள். நாங்கள் துணை நிற்கின்றோம் எனக் குறிப்பிட் டார்.

தொடர்ந்து   மதுரை மண்ட லத்தலைவர் அ,முருகானந்தம்,  மாதந்தோறும் நடத்தப்பட இருக்கும் கருத்தரங்கத்திற்கு இடத்தை அளிக்கிறேன் என்றார். ஓய்வுபெற்ற நீதியரசர் நடராசன் ஒலிபெருக்கி எனது பொறுப்பு எனச்சொல்லி பல்வேறு ஆலோசனைகளைக் கூறினார். மதுரை மாநகர் மாவட்ட தலை வர் சே.முனியசாமி கருத்தரங் கத்திற்கு பண உதவி அளிக்கி றேன் எனத் தோழர்களை உற் சாகப்படுத்தினார்.

மதுரை மண்டலச் செயலா ளர் மா.பவுன்ராசா, மேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கத் தலைவர் பால்ராசு, செயலா ளர் வேம்பன்,ஆசிரியர் கார்த்தி கேயன், சேகர், பா.சடகோபன், செல்ல கிருட்டிணன் ஆகியோர் தங்கள் கருத்துகளை எடுத்து ரைத்தனர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவர் கே.டி.சி.க.குருசாமி அவர்கள் மதுரை மாநகர் மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழகம் சிறப் பாகச் செயல்படவேண்டும் என வேண்டுகோள் வைத்தார். தனது ஊரான இராயகிரியில் தொடர்ந்து நடைபெறும் இயக் கச்செயல்பாடுகளை எடுத்து ரைத்தார்.

மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் சி.இர மேசு அவர்கள் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இருக்கும் வாய்ப்பையும், பகுத்தறிவு ஆசிரியர் அணியை  இந்த மாவட்டத்தில் கட்டமைக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். நீட் தேர்வு என்னும் இந்தத்தேர்வினை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட வகுப்பினைச்சேர்ந்தவர் கள் அபாயம் புரியாமல் - தீவி ரமாக எதிர்க்காமல் இருப்பதா கக்  குறிப்பிட்டார். நமக்கு கிடைத் திருக்கும் கொஞ்ச நஞ்ச வாய்ப் பையும் குழிதோண்டிப்புதைப் பது இந்த நீட் தேர்வு என்ப தனை மிக விளக்கமாக எடுத் துக்காட்டுக்களோடு குறிப்பிட் டார். பகுத்தறிவு ஆசிரியரணி இந்த மாவட்டத்தில் சிறப்பாக செயல்படவேண்டும்  எனக் குறிப்பிட்டார்.

நிறைவாக உரையாற்றிய பகுத்தறிவாளர் கழகத்தலைவர் முனைவர் வா.நேரு, பெரியா ரியம் என்னும் மிகப்பெரிய கொள்கை நமக்கு கிடைத்திருக் கிறது. அதனை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில்- உலகளவில் பரப்பும் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நமக்கு கிடைத்திருக்கின்றார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களாகிய உழைக்கும் மக்களை நம்மால்மட்டுமே ஒருங்கிணைக்க இயலும். பிறந்த சாதியின் பெருமையை பேசச்சொல்லி ஆர்.எஸ்.எஸ். சும்,   பி.ஜே.பி.யும் சொல்லிக் கொடுக்கின்றார்கள். ஆண்ட பரம் பரை எனப்பெருமை பேசுங்கள் எனத் தாழ்த்தப்பட்ட, பிற்ப டுத்தப்பட்ட மக்களுக்கு சொல் லிக்கொடுத்து பின்பு அவர்க ளுக்குள் சண்டையையும் பார்ப் பன அமைப்புகள் ஏற்படுத்து கின்றன. எந்த சாதியில் பிறந் திருந்தாலும் நமக்கு இருக்கும் இழிவைத்துடைத் தெறிந்து மனிதர்களாக, திராவிடர்களாக ஒன்றிணையச் சொல்வது பெரி யாரியக்கம். அமைச்சர்களை மேடையில் வைத்துக்கொண்டு, சாஸ்திரப்படி, சட்டப்படி நீங் களெல்லாம் மாண்புமிகு தேவ டியாள் மகன்கள், நாங்களெல் லாம் சாதாரண தேவடியாள் மகன்கள் எனக்குறிப்பிட்டு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இழிவினைத்துடைத் தெறிய வேண்டும் என்றவர் தந்தை பெரியார். இன்றைய காலகட்டத்தில் பெரியாரியல் வாதிகளான நாம், பொதுவு டமை வாதிகள், அம்பேத்காரிய வாதிகள் அனைவரும் ஒன்று பட்டு போராடவேண்டிய நேரம். பொது எதிரியாக இன்றைக்கு பார்ப்பன மேலாண்மையைச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ்.ம் அதனுடைய பரிவார அமைப் புக்களும் இருக்கின்றன. எனவே நாம் ஒன்றிணைய வேண்டும். சின்னச்சின்ன அளவில்கூட நமது கருத்துக்களை தொடர்ந்து பரப்பவேண்டும். உண்மையி லேயே புரட்சிகரமான இயக் கம் என்றால் அது நமது இயக் கம்தான். ‘தொட்டில் தொடங்கி சுடுகாடு வரைக்கும் வாழ்க்கை சடங்குகளாலேயே கனக்கிறது‘ என்றார் அண்மையில் மறைந்த கவிஞர் இன்குலாப். பெரியா ரியல்வாதிகள் கடவுளை மறுப் பவர்கள், சாதியை ஒழிக்க வேண்டும், மதத்தை ஒழிக்க வேண்டும் எனச்சொல்பவர்கள் மட்டுமல்ல; சடங்குகளை மறுப்பவர்கள்! சடங்குகளை மறுப்பவர்களைத்தான் பார்ப்பனர்கள் உண்மையான எதிர்ப்பாளர்களர்களாகக் கருதுகிறார்கள். இன்றைக்கு நமது பணி இன்றியமையாத பணி - தொடர்ந்து செயல்பட வேண்டும். மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கப்பொறுப்பாளர்கள் சிறப்பாக செயல்படுவதாக அறிவித்திருக் கின்றார்கள். புதிய பொறுப்பா ளர்களும் அவர்களோடு இணைந்து பணியாற்றவேண்டும். மாதந்தோறும் கருத்தரங்குகள் நடத்தவேண்டும். மாநில ஆசி ரியரணிப்பொறுப்பாளராக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் சி.இரமேசின் மணமேடையிலேயே அறிவித்தார்கள். நல்ல பேச்சாளர் அவர். பகுத் தறிவாளர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் மா.அழகிரி சாமி ஓய்வுபெற்ற கல்வி அதி காரி. மிக நன்றாக தோழர்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்கின்றார். தமிழர் தலைவர் அவர்களின் எண்ணங்களை ஒன்றிணைந்து செயல்பட்டு நிறைவேற்றுவோம் என உரை யாற்றினார். .

தீர்மானங்கள்

1) பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை செயல்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

2) பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு ஆசிரியரணிக்கு புதிய உறுப்பினர்களைச்சேர்ப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

3) புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங் கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

4) தி மாடர்ன் ரேசனலிஸ்டு, விடுதலை, உண்மை,பெரியார் பிஞ்சு இதழ்களுக்கு சந்தா சேர்ப் பது என முடிவு செய்யப்பட்டது.

கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டனர்

உசிலம்பட்டி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணித் தலைவர்: அய்யனார்குளம் சி.ஏ.தனுஷ்கோடி (ஆசிரியர்)

செயலாளர்:  செக்கானூரணி பா.செங்கதிர்

மதுரை மாநகர் மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர்: இராம. அழ.கார்த்திகேயன்

மதுரை மாநகர் மாவட்டபகுத்தறிவாளர் கழகம்:

தலைவர் : சுப.முருகானந் தம்

துணைத்தலைவர்கள்: செல்ல.கிருட்டிணன்,    சு.மோதிலால்

செயலாளர் : பெரி.காளி யப்பன்,

துணைச்செயலாளர்கள் : காளி. செல்வசேகர், புத்துகத் தூதன் பா.சடகோபன்

நிறைவாக மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச்செயலாளர்  பா.சட கோபன் நன்றியுரை கூறினார்

நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட கழகச்செயலாளர் அ. வேல்முருகன், மேலூர் மாவட் டத் தலைவர் மோதிலால், செயலாளர் எரிமலை, உசி லம்பட்டி மாவட்டத்தலைவர் சிவகுருநாதன், வழக்கறிஞர் கணேசன், திருப்பரங்குன்றம் அழகர்சாமி, விராட்டிபத்து ந. முருகேசன், பீபிகுளம் பிச்சைப் பாண்டி, சுரேஷ், ஆட்டோ செல் வம், மளிகைக்கடை மாரிமுத்து, புதூர் பாக்கியம், மு.கனி, வடக்குமாசி வீதி செல்லத்துரை, அழகுபாண்டி, கதிரேசன்-அவரது மகள் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.