Sunday, April 16, 2017

பகுத்தறி வாளர் கழக - பகுத்தறிவு ஆசிரியரணியின் பொறுப்பாளர் களின் மாநில கலந்துரையாடல் கூட்டம் ....

சென்னை, பெரியார் திடலில் 5.3.2017 அன்று பகுத்தறி வாளர் கழக - பகுத்தறிவு ஆசிரியரணியின் பொறுப்பாளர் களின் மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மாலை 5.15 மணிக் குத் தொடங்கி நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர்  கி.வீரமணி தலைமை வகித்தார்.மாநிலம் முழுவதிலுமிருந்து பொறுப்பாளர்கள் மிக அதிக அளவில் கூட்டத்தில் பங்கேற்று, (ஏறக்குறைய 90 தோழர்கள்) உரையாடியது பகுத்தறிவாளர் கழக - பகுத்தறிவு ஆசிரியரணி செயல்பாட்டில் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் ஈடுபாட்டை, அக்கறையினைக் காட்டுவதாக இருந்தது.

ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளரும் கடந்த கால செயல்பாடுகள், வருங்காலத் திட்டங்கள் பற்றி மிகச் சுருக்க மாக எடுத்துரைத்தனர். பகுத்தறிவு ஆசிரியரணியின் பொறுப் பாளர்கள் தங்களது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து, அதன் நடைமுறைக் கான வழிமுறைகளையும் வழங்கினார்கள்.

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர்

தமிழர் தலைவரின் வழி காட்டும் நெறியுரை

கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமை வகித்த கழகப் புரவலர் தமிழர் தலைவர் தமது நிறைவுரையில் குறிப்பிட்ட தாவது:

பகுத்தறிவாளர் கழகம், இயக்கத்தின் பிரச்சாரப் பணியில் ஒரு தனித்துவமான தளத்தில்  செயல்படவேண்டுமென்ற சீரிய நோக்கத்தில் தந்தை பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட அமைப்பாகும். அரசமைப்புச் சட்டத்தில், நெருக்கடி காலத் தில் (1976இல்) சேர்க்கப்பட்ட குடிமக்களின் அடிப்படைக் கட மைகளாக (திuஸீபீணீனீமீஸீtணீறீ ஸிவீரீலீts)  வலியுறுத்தப்பட்டவை களை தொலைநோக்கோடு 1971ஆம் ஆண்டிலேயே செயல் திட்டமாக - பரப்புரை பணியாகக் கொண்டு தந்தை பெரியார் பகுத்தறிவாளர் கழகத்தினை உருவாக்கினார். அடிப்படைக் கடமைகளுள் ஒன்றான விதி 51 கி(லீ) படி அறிவியல் மனப்பான்மையினை வளர்த்தல், ஏன் எதற்கு என வினா எழுப்பி வினையாற்றுதல், மனித நேயம் பேணுதல், சீர்திருத்தச் சிந்தனைகளை வளர்த்துப் பெருக்குதல் ஆகிய கடமைகளை நடைமுறைத் திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமைப்பு பகுத்தறிவாளர் கழகம் ஆகும். குறிப்பாக பகுத்தறிவு ஆசிரியரணியின் பணிகள் இன்னும் சிறப்பானவை. குடிமக்களின் அடிப்படை கடமைகளை இளம் நெஞ்சங்களில் பதித்து வருங்காலத்தில் சமுதாயப் பொதுக் கடமை மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்கிடும் பணியினைச் செய்து வருகிறார்கள்.

மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள், மனித ஆற் றலை, பொருளாதார நிலையினை சீரழித்து வரும் இன்றைய சூழலில், பகுத்தறிவாளர் கழகத்தின் பணி பரந்துபட்டு சுழன்று நடைபெற வேண்டும். ஒவ்வொரு பொறுப்பாளரும், தோழ ரும் ஒரு நடமாடும் பிரச்சாரக் கருவியாகவே தங்களைக் கருதி செயல்பட முன்வரவேண்டும். பிரச்சாரப் பொறியினைத் தட்டிவிட்டு, அதுகுறித்த சிந்தனையில் உள்ளோரை ஆழமாக கருத்துகளில் ஆட்படுத்த, இயக்க இதழ்களை அவர்கள் படிக்கும் வாய்ப்பினை உருவாக்கிட வேண்டும். தங்கள் பகுதியில் சிறு நூலகங்களை அமைத்து இயக்க ஏடுகளை வருவித்து பொதுமக்கள் படித்துப் பயன்பெறும் வகையில் செயல்படலாம். கருத்தரங்கங்கள் நடத்தி அறி வார்ந்த சிந்தனை வட்டத்தினை சிறிய அளவிலே உருவாக் கிட முன்வரலாம். பகுத்தறிவாளர் கழகத்தின் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஏதேனும் ஒரு அலுவலகப் பணியில் உள்ள நிலையில், திட்டமிட்டு - நேரம் ஒதுக்கி செறிவாகச் செயல்பட முன்வரவேண்டும்.

ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை சார்ந்த மத விழாக்களைப் பற்றிய அறிவியல் ஆதாரமற்ற, அர்த்தமற்ற போக்கினைக் குறித்து முன் திட்டத்துடன் பிரச்சாரம் செய்யலாம். அவை பற்றிய பிரசுரங் களை, தலைமையிடத்தில் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களை பொது மக்களிடம் பரவலாக வழங்கலாம். அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற நுண் பரப்புரை திட்டத்தை (விவீநீக்ஷீஷீ றிக்ஷீஷீஜீணீரீணீஸீபீணீ றிக்ஷீஷீரீக்ஷீணீனீனீமீ) பொறுப்பாளர்கள் உருவாக்கிக் கொண்டு செயல்பட்டால் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடு மேலும் செம்மைப்படும். பொறுப்பாளர்கள் இத்தகைய அணுகு முறையுடன் செயல்படும் வழக்கத்தை வாடிக்கையாக்க வேண்டும்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பிரச்சாரப் பணியில் எளிமையாக கருத்துகளை எடுத்துச் சொல்லும் வழிமுறைகளை விளக்கினார். ஒவ்வொரு பகுதி யிலும் அங்குள்ள தோழர்கள் ‘பகுத்தறிவுப் பலகை’யினை பொது இடத்தில் நிறுவி, நாள்தோறும் பொருத்தமான பகுத்தறிவுக் கருத்துகளை, தந்தை பெரியாரின் பொன்மொழி களை எழுதினால் அவை ஒரு பெரிய தாக்கத்தினை ஏற் படுத்தும் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, செயல் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி, திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் - அண்ணா. சரவணன், கே.டி.சி.குருசாமி, கா.நல்லதம்பி, மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் மா.அழகிரி சாமி, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.ரமேசு, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர்.

உரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர்கள்: சு.திருமா வளவன் (திருநெல்வேலி), எஸ்.கரிகாலன் (திருவாரூர்), கோபு.பழனிவேல் (தஞ்சாவூர்), டி.இருதயராஜ் (கும்மிடிப்பூண்டி), தங்க.சிவமூர்த்தி (அரியலூர்), டாக்டர்  எஸ்.டி.இரத்தினசபாபதி (தென் சென்னை), வா.தமிழ்ப் பிரபாகரன் (ஆத்தூர்), சி.மெர்சி ஆஞ்சலாமேரி (பழனி), அ.சிவக்குமார் (செங்கல்பட்டு), மா.இராசய்யா (தென்காசி), உ.சிவதாணு (கன்னியாகுமரி), அ.சரவணன் (புதுக்கோட்டை), புயல் சு.குமார் (திருத்துறைப் பூண்டி), நெ.நடராசன் (புதுச்சேரி), ஆசிரியரணி சே.ஜானகி ராமன் (திருப்பத்தூர்), ஜி.எஸ்.எஸ்.நல்லசிவன் (ராச பாளை யம்), ச.வெங்கட்ராமன் (தூத்துக்குடி), இரா.இராமதுரை (ஆவடி), அ.சாமிதுரை (மயிலாடுதுறை), கோவி.அன்புமதி (மேட்டூர்), பேராசிரியர் ப.சம்பத் (நாமக்கல்), க.வெங்கடேசன் (திருப்பத்தூர்), கி.கார்வண்ணன் (விழுப்புரம்), ஆசிரியர் கி.எழில் (திருவள்ளூர்), கோ.பாலசுப்பிரமணியன் (லால்குடி), இரா.முத்துகிருட்டிணன் (நாகப்பட்டிணம்), அய்.லூயிஸ்ராஜ் (கிருட்டிணகிரி), மணிவண்ணன் (லால்குடி)

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானம்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர், கொடையாளர், பகுத்தறிவு பரப்பலுக்கும், பயிற்சி முகாமிற்கும் உற்ற துணையாக இருந்த, தமிழர் தலைவர் மேல் எந்நாளும் பாசம் கொண்டிருந்த அய்யா வி.கே.யென். கண்ணப்பன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் இக்கூட்டம் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

ள தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகமெல்லாம் கொண்டு செல்லும் தமிழர் தலைவர், தந்தை பெரியாருக்குப் பின்னால், அன்னை மணியம்மையாருக்குப் பின்னால் திராவிடர் கழகத்தைக் கட்டிக்காப்பாற்றி வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பரப்புரை பயண ஊர்தியினை வழங்கிட ஏற்பாடுகள் செய்த திராவிடர் கழக மாநில இளைஞரணி, மாணவரணிக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, முதன்முதலில் பரப்புரை பயண ஊர்திக்காக  நன்கொடைகளை அளித்து ஊக்கமூட்டிய பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கு நன்றியை, பாராட்டை இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

அ) ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் (ழிணிணிஜி) நுழைவுத்தேர்வுக்கு தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்கும் தமிழ் நாடு சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை உடனே வழங்க கேட்டுக்கொள்கிறது.

ஆ) மாவட்ட அளவில் , பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பாக புதிய கல்விக்கொள்கை எனும் பெயரில் வரும் குலக் கல்வித்திட்டத்தினை விளக்கி கருத்தரங்குகள் நடத்த முடிவு செய்யப்படுகிறது.

ள பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவினை ஏப்ரல்-29 அல்லது அதனை ஒட்டி நடத்த முடிவு செய்யப்படுகிறது.

ள முகநூல் (திணீநீமீதீஷீஷீளீ), கட்செவி (கீலீணீtsணீஜீஜீs), சுட்டுரை (ஜிஷ்வீttமீக்ஷீ), வலைத்தளம் (மிஸீtமீக்ஷீஸீமீt) போன்றவற்றை பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள் நன்கு கையாள வேண்டும். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைப்படி நமது இயக்கத்தினைப் பற்றிய விமர்சனப் பதிவுகளுக்கு நமது எதிர்ப்பினை நாகரீகமாகவும், ஆதாரங்களோடும் ஆணித்தர மாகவும் விளக்கமளிக்க வேண்டும். அதற்கான இணைய பயிற்சி முகாம்களை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக நடத்திட வேண்டுமெனத் தீர்மானிக்கப்படுகிறது.

ள இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பகுத்தறிவாளர் கள் கொல்லப்படுவது இந்த ஆட்சியில் தொடர்கின்றது. மராட் டியப் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வில்லை, தண்டிக்கப்படவில்லை; நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி போன்றவர்களின் படு கொலைக்கு காரணமானவர்களை கைதுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.

ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து விதிகளுக்கு மாறாக கட்டிடங்கள் கட்டும் கார்பரேட் சாமியார்களின் நிகழ்ச்சிகளில் பிரதமர், முதல்வர், ஆளுநர் போன்றவர்கள் கலந்துகொள்வது நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானதாகும். “ஜாக்கிரதை, ஜாக்கிரதை, சாமியார்கள் ஜாக்கிரதை”  எனத் திராவிடர் கழகம் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிரச் சாரம் செய்துவருகின்றது. ஆட்சியாளர்களின் உதவியோடு வலம் வரும் கார்பரேட் சாமியார்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திட கருத்தரங்குகள் நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

ள அரசு அலுவலங்களில் கடவுளர் படங்களை வைப்பதும், போலீஸ் உடுப்போடு சாமியாடுவதும் தீ மிதிப்பதுவும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. அவர்கள் மீது சட்டப்படி துறைரீதியான நடவடிக்கை எடுக்க மாநில அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ள தமிழக அரசின் பாடத்திட்டங்களில் உள்ள மூட நம் பிக்கை சார்ந்த பாடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. பெண் உரிமை சார்ந்த பாடங்களை பாடத்திட்டங்களில் சேர்க்கவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ள அறிவியல் கண்டுபிடிப்புக்களான ஊடகங்கள், பேய்-பிசாசு, பாம்பு பெண் போன்ற தொடர்களையும், ஜோதிடம் போன்ற அறிவியலுக்குப்  புறம்பான கருத்துகளையும் பரப் புவதை நிறுத்தவேண்டும் எனக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ள கர்நாடக அரசு போல மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத் தினை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென  இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ள ஜெர்மனி மாநாடு: ஜெர்மனி நாட்டு கொலோன் பல் கலைக்கழகத்தில் ஜூலை 27, 28 மற்றும் 29, 2017 ஆகிய மூன்று நாள் பன்னாட்டு பெரியாரியல் சுயமரியாதை இயக்க மாநாடு (மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ சிஷீஸீயீமீக்ஷீமீஸீநீமீ ஷீஸீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ ஷிமீறீயீ-ஸிமீsஜீமீநீt விஷீஸ்மீனீமீஸீt) நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள், நாத்தி கர்கள், மதச் சார்பற்ற சுதந்திர சிந்தனையாளர்கள் என பல தரப்பினரும் அமைப்பு ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர். பகுத்தறிவாளர் கழகத்திலிருந்து தோழர்கள் பலரும் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்றிடவும், உலக அளவில் முதன் முறையாக சுயமரி யாதை இயக்க மாநாடு நடைபெற உள்ளதை பரந்த அளவில் பரப்புர செய்திடவும் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

தீர்மானங்களை புலவர் இரா.சாமிநாதன் (திண்டிவனம்), அ.தா.சண்முக சுந்தரம் (தாம்பரம்) ஆகியோர் முன்மொழிய அனைவரும் கரவொலி எழுப்பி வழி மொழிந்தனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் வடசென்னை மாவட்டத் தலைவர் கோவி.கோபால் வரவேற்புரை ஆற்றிட நிறைவாக வடசென்னை ஆ.வெங்கடேசன் நன்றி கூறினார்.

பங்கேற்ற பொறுப்பாளர்கள்


மற்றும் தோழர்கள்:

விழுப்புரம் மாவட்ட செயலாளர் வே.ரகுநாதன், லால்குடி பொருளாளர் வீ.சுப்ரமணியன், புதுச்சேரி மாவட்ட துணைத் தலைவர் கு.ரஞ்சித்குமார், புள்ளம்பாடி எஸ்.பொற்செழியன், கோபி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் அ.குப்புசாமி, திருவள்ளூர் கே.தேசன், ஆவடி மாவட்டம் ஆ.வெ.நடராசன், கூடுவாஞ்சேரி மா.இராசு, வடசென்னை மாவட்ட செயலாளர் பா.இராமு, திண்டிவனம் மாவட்ட செயலாளர் சா.மாரிமுத்து, மறைமலை நகர் தலைவர் மு.பிச்சைமுத்து, வேலூர் ச.பாஸ்கரன், விருகம்பாக்கம் மரு.வேல்துரை, சென்னை கோ.கண்ணன், ஆத்தூர் ச.வினோத்குமார், ஆத்தூர் ப.கோபிநாத், ஆத்தூர் மாவட்ட அமைப்பாளர் அ.அறிவுச் செல்வம், சேலம் கூ.செல்வம், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் பொ.இராஜி, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ச.அழகிரி,  தஞ்சை மாவட்டம் விடுதலை வாசகர் வட்ட தலைவர் த.வெற்றிவேந்தன், சேலம் இரா.கண்ணன், ஆவடி மாவட்ட செயலாளர் வே.பன்னீர் செல்வம், ஒரத்தநாடு பூவை.முருகேசன், தென் சென்னை மாவட்ட செயலாளர் பேராசிரியர் எஸ்.அருட்செல்வன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் மு.இரா.மாணிக்கம், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் மு.இரா.மாணிக்கம், தென் சென்னை கி.வினோத்குமார், இராச பாளையம் மாவட்ட மேனாள் செயலாளர் அ.போ.கங்காதரன், கும்மிடிப்பூண்டி அமைப்பாளர் வி.ராஜபோஸ், புழல் பிரேம் குமார், திருவண்ணாமலை பா.வெங்கட்ராமன், திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.சிவக்குமார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்.பகுத்தறிவாளர் கழகப்

பொறுப்பாளர்கள்

தலைமையிடம்

மாநில துணைச் செயலாளர்:

ஆ.வெங்கடேசன்

கும்முடிப்பூண்டி மாவட்டம்

தலைவர்: டி.இருதயராஜ்,

செயலாளர்: பாஸ்கரன்

தருமபுரி மாவட்டம்

தலைவர்: கதிர்.செந்தில்குமார்

துணைத் தலைவர்: இர.கிருட்டிணமூர்த்தி

செயலாளர்: மாரி.கருணாநிதி

திருவள்ளூர் மாவட்டம்

தலைவர்: கி.எழில்

செயலாளர்: ந.அறிவுச்செல்வன்

திருவண்ணாமலை மாவட்டம்

தலைவர்: பா.வெங்கட்ராமன்