Saturday, April 29, 2017

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சங்பரிவார அமைப்புகள் செய்கின்றார்கள் மேலூர் பகுத்தறிவாளர் கலந்துரையாடல் கண்டனம் ....

மதுரை, ஏப். 29- மேலூர் கழக மாவட்ட பகுத்தறிவாளார் கழ கக் கூட்டம் 16.04.2017 ஞாயிற் றுக்கிழமை மாலை 6 மணிக்கு கூடல் நகரில் மாவட்ட பகுத்த றிவாளர் கழகத்தலைவர் பால் ராசு அவர்கள் இல்லத்தில் அவ ரது தலைமையில் நடைபெற்றது.
மேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகச்செயலாளர் வேம் பன் அனைவரையும் வரவேற் றார். மேலூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தலைவர் பால் ராசு தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.
நிகழ்வின் தொடக்க உரையினை பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை மா.அழகிரிசாமி ஆற்றி, கூட் டத்தின் நோக்கத்தினையும், சென்னையில் நடைபெற்ற மாநில பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்று வது பற்றியும், மாவட்ட அள வில் எப்படிப்பட்ட அணுகு முறைகளைக் கையாளவேண் டும் என்றும், இணையதளத் தைப் பயன்படுத்தி வாட்ஸ் அப், முக நூல், செல்பேசிகள் மூலம் செய்திகளைக் கொண்டு செல்வது போன்றவற்றின் மூலம் இயக்கப்பணிகள் ஆற்று வது பற்றியும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர்கள் விருதுநகர் கா.நல்லதம்பி, இராயகிரி கே.டி. சி.குருசாமி ஆகியோர் உரை யாற்றினர். தொடர்ந்து உரை யாற்றிய பகுத்தறிவாளர் கழ கத்தின் மாநில செயல்தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உழைப்பையும் உடல் நிலையையும் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டு, பகுத்தறிவாளர் கழகம் சிறப் பாக செயல்படவேண்டிய தேவையை வலியுறுத்தினார். இன்றைய சூழலில்  திராவிட இயக்கங்களுக்கு  மிகவும் திட் டமிட்டு பார்ப்பன இயக்கங் களும், அமைப்புக்களும் இடை யூறு கொடுப்பதையும் அதனை இன்றைக்கு எதிர்கொள்ள வேண்டிய நிலையில் திரா விடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றார்கள், அரும்பாடுபட்டு நாம் பெற்ற சமூக நீதிக்கு பங்கம் ஏற்படா மல் பாதுகாக்க வேண்டிய நிலை இருக்கிறது.
பார்ப்பனர்கள் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததுமுதலே, மிக வும் அநியாயமாக நடந்துகொள் கின்றார்கள், பெண்களுக்கு எதி ரான வன்முறைகள் சங் பரிவார அமைப்புக்கள் செய்கின்றார் கள், பசுவைப் பாதுகாக்கின் றோம் என்று சொல்லி மனி தர்களைக் கொல்கின்றார்கள். தமிழகத்தில் அவர்கள் ஒன்றும் காலூன்ற முடியவில்லை என் பதற்காக பலவிதமான சூழ்ச்சி வலைகளைப் பின்னுகின்றார் கள். அதனை அடையாளம் காட்டக்கூடிய இயக்கமாக நமது இயக்கம் இருக்கிறது. நமது தலைவர் ஆசிரியர் இருக் கின்றார். திட்டமிட்டு பணி யாற்றுங்கள், தொடர்ந்து பணி யாற்ற வேண்டிய காலம் இது என வலியுறுத்தி உரையாற் றினார்.
தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதியரசர் பொ. நடராசன் அவர்கள் தனது வாழ்வின் பல நிகழ்வுகளை எடுத்துக்கூறி, நமது இயக்க கூட்டங்கள் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படுகின்றன, அதற்கு வேண்டுமென்றே இடையூறு செய்பவர்களை, அதற்கு துணை போவார்களை சட்டப்படி எப்படி சந்திப்பது என்பதனை எடுத்துக்கூறினார். நிகழ்வின் நிறைவுரையை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு நிகழ்த் தினார்.
நிகழ்வில் திராவிடர் கழக மதுரை மண்டலத் தலைவர் அ.முருகானந்தம், செயலாளர் மா.பவுன்ராசா, மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் சே.முனிய சாமி, செயலாளர் அ.வேல் முருகன், அமைப்பாளர் ந.முரு கேசன், போட்டோ இராதா, மாணவரணித் தலைவர் எ.பிர பாகரன், மேலூர் மாவட்டத் தலைவர் மோதிலால், மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தலைவர் சுப.முருகானந்தம், செயலாளர் பெரி.காளியப்பன், துணைத் தலைவர் செல்ல.கிருட்டிணன், துணைச் செயலாளர்கள் பா.சடகோபன், செல்வசேகர், உசி லம்பட்டி மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தலைவர் சுப்பிர மணியன், மாவட்ட ஆசிரிய ரணி அமைப்பாளர் செங்கதிர், க.அழகர், மு.கனி, ஆட்டோ செல்வம், இணையதள செயற் பாட்டாளர் சுந்தர், வழக்குரை ஞர் தியாகராசன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பகுத்தறி வாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி சிறப்பாக நடை பெற தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

நன்றி : விடுதலை 29.04.2017